Homeசெய்திகள்சினிமாசுந்தர்.சி-யின் 'கேங்கர்ஸ்' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை..... சைலன்டாக நிறைவடைந்த படப்பிடிப்பு!

சுந்தர்.சி-யின் ‘கேங்கர்ஸ்’ படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை….. சைலன்டாக நிறைவடைந்த படப்பிடிப்பு!

-

சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக அரண்மனை 4 திரைப்படம் வெளியானது. தமன்னா, சந்தோஷ் பிரதாப், ராஷி கண்ணா ஆகியோரின் நடிப்பில் வெளியான இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.சுந்தர்.சி-யின் 'கேங்கர்ஸ்' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை..... சைலன்டாக நிறைவடைந்த படப்பிடிப்பு! மேலும் சுந்தர் சி கலகலப்பு 3, மூக்குத்தி அம்மன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் இவர் கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி இந்த படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுந்தர்.சி-யின் 'கேங்கர்ஸ்' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை..... சைலன்டாக நிறைவடைந்த படப்பிடிப்பு!நடிகை கேத்ரின் தெரசாவும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சத்யா சி இசையமைக்க வெங்கட் ராகவன் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தில் பிரபல நடிகை வாணி போஜன் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது அத்துடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சுந்தர்.சி-யின் 'கேங்கர்ஸ்' படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை..... சைலன்டாக நிறைவடைந்த படப்பிடிப்பு!எனவே படக்குழுவினர் படத்தினை 2024 டிசம்பர் அல்லது 2025 ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றனராம். இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ