spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏ.ஆர். முருகதாஸின் 'மதராஸி' பட ட்விட்டர் விமர்சனம் இதோ!

ஏ.ஆர். முருகதாஸின் ‘மதராஸி’ பட ட்விட்டர் விமர்சனம் இதோ!

-

- Advertisement -

மதராஸி படத்தின் ட்விட்டர் விமர்சனம்.ஏ.ஆர். முருகதாஸின் 'மதராஸி' பட ட்விட்டர் விமர்சனம் இதோ!

பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதராஸி’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், பிஜு மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். ‘அமரன்’ படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு இப்படம் வெளியாகி இருப்பதால் இந்த படத்தை திரையரங்குகளில் காண ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். அதே சமயம் ரசிகர்கள் இந்த படம் குறித்து தங்களின் விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “எஸ்.கே-வின் கதாபாத்திரம் அருமை. பிஜு மேனன் மற்றும் சபீர் ஆகியோர் நன்றாக நடித்துள்ளனர். இசை ஏமாற்றமளிக்கிறது. லைவ் லொகேஷன்ஸ், சண்டை காட்சிகள், எடிட்டிங் படத்திற்கு பலம் தருகிறது. முதல் பாதி அருமை. சூப்பரான இன்டர்வெல். ஆக்ஷன் நிறைந்துள்ளது. இரண்டாம் பாதி நீளமாக இருக்கிறது. ஆனால் கதை நகரவில்லை. ஆக்சன் விரும்பிகள் பார்க்க வேண்டிய படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், “இன்டர்வெல் பிளாக் வெறித்தனமாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் நடிப்பு மற்றும் ஏ.ஆர். முருகதாஸின் அமைப்பு ஒரு அற்புதமான திரையரங்க அனுபவத்தை தருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

வேறொரு ரசிகர், “முதல் பாதி நன்றாக இருக்கிறது. காதல் மற்றும் ஆக்சன் நிறைந்துள்ளது. அதைத்தொடர்ந்து டீசன்டான இரண்டாம் பாதி. அது முழுக்க முழுக்க ஆக்சன் மோடில் உள்ளது. இன்டர்வெல் பிளாக், வித்யூத்தின் சோலோ ஆக்சன், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஆகியவை நன்றாக செயல்படுத்தப்பட்டுள்ளது. நீளமான இரண்டாம் பாதி சற்று சோர்வு தருகிறது. சிவகார்த்திகேயன் கேரக்டர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வித்யூத் கேரக்டர் ஸ்டைலாகவும், மாஸாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் பிஜு மேனன் மற்றும் ருக்மினி ஆகியோருக்கு நல்ல ஸ்கோப். பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டிலும் அனிருத் ஸ்கோர் செய்கிறார். மேக்கிங் மற்றும் விஷுவல் பிரம்மாண்டமாக இருக்கிறது. மொத்தத்தில் சராசரிக்கும் மேலான பொழுதுபோக்கு படம். ஆக்சன் விரும்பிகளுக்கு நல்ல ட்ரீட்” என்று தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

MUST READ