நடிகை கஸ்தூரிக்கு ஏஆர் ரஹ்மான் அளித்துள்ள பதில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சமீபத்தில் ஒரு விருது விழாவில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சாய்ரா பானுவை மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். மேடைக்கு வந்த சாய்ரா பானு பேசத் துவங்கும் முன்னரே அவரை இடைமறித்த ரஹ்மான் ”இந்தியல பேசாதீங்க தமிழ்ல பேசுங்க’ என்று கூறினார்.

அதற்கு ஆங்கிலத்தில் பதிலளித்த சாய்ரா எனக்கு தமிழ் அவ்வளவு கோர்வையாக பேச வராது. மன்னித்துக்கொள்ளுங்கள் என்று பேசினார்.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் நடிகை கஸ்தூரி “என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ரஹ்மான் காதலுக்கு மரியாதை என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதில் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.