spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரசிகர்களின் பேராதரவை பெற்ற 'அரண்மனை 4'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரசிகர்களின் பேராதரவை பெற்ற ‘அரண்மனை 4’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

அரண்மனை 4 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரசிகர்களின் பேராதரவை பெற்ற 'அரண்மனை 4'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர். இவர் பல படங்களில் நடித்துவரும் நிலையில் ஏராளமான வெற்றி படங்களையும் இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அவர் இயக்கிய படங்களில் அரண்மனை 1,2,3 போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்தன. காமெடி கலந்த ஹாரர் படமாக வெளியான இந்த படங்கள் ஒன்று கொண்டு தொடர்பில்லாமல் உருவாக்கப்பட்டிருக்கும். அதே சமயம் மிகவும் பிரம்மாண்டமாகவும் படமாக்கப்பட்டிருப்போம். இந்நிலையில் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் நடந்த மே 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இதில் தமன்னா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க சுந்தர் சி தமன்னாவிற்கு அண்ணனாக நடித்திருந்தார். மேலும் ராஷி கண்ணா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் போன்றோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரசிகர்களின் பேராதரவை பெற்ற 'அரண்மனை 4'..... ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!இந்த படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வசூலிலும் 100 கோடியை தாண்டி உள்ளது. இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசை அமைத்திருந்த நிலையில் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. 30 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் இந்த படமானது வருகின்ற ஜூன் 21ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ