Homeசெய்திகள்சினிமா'அரண்மனை 4' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!

-

அரண்மனை 4 படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை 1, 2, 3 போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியான இந்த மூன்று பாகங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உருவாக்கப்பட்டிருந்தது. 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!அதைத்தொடர்ந்து சுந்தர் சி தற்போது அரண்மனை நான்காம் பாகத்தை இயக்கியுள்ளார். அரண்மனை 4 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் குஷ்பூவும் பென்ஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் அருண்குமாரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் ஏற்கனவே 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 2024 ஏப்ரலில் இந்த படம் வெளியாக இருக்கிறது.'அரண்மனை 4' படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு! இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்திருந்தனர். இந்நிலையில் அரண்மனை 4 படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ