Homeசெய்திகள்சினிமா'விடாமுயற்சி' ரொம்ப வித்தியாசமானது...... இந்த மாதத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதை உறுதி செய்த அர்ஜுன்!

‘விடாமுயற்சி’ ரொம்ப வித்தியாசமானது…… இந்த மாதத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதை உறுதி செய்த அர்ஜுன்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் அஜித் துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். 'விடாமுயற்சி' ரொம்ப வித்தியாசமானது...... இந்த மாதத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதை உறுதி செய்த அர்ஜுன்!மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். மங்காத்தா படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அஜித், அர்ஜுன், திரிஷா ஆகியோரின் கூட்டணி விடாமுயற்சி திரைப்படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம் இவர்களுடன் இணைந்து இந்த படத்தில் ஆரவ், ரெஜினா ஆகியோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏற்கனவே இந்த படத்தில் 70% படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் பின்னர் வணிக ரீதியிலான காரணத்தால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு இந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நடிகர் அர்ஜுன், தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதி, சம்பந்தி தம்பி ராமையா ஆகியோருடன் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடாமுயற்சி சம்பந்தமான கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அர்ஜுன், “இந்த மாதத்தில் அஜர்பைஜானில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும். இன்னும் 20 இருந்து 30 சதவீத படப்பிடிப்புகள் தான் மீதம் இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். விடாமுயற்சி படம் ரொம்ப வித்தியாசமான படம்” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.

எனவே இதன் மூலம் விடாமுயற்சி திரைப்படமானது 2024 தீபாவளி ரிலீஸுக்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

MUST READ