தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ஜுன் தாஸ். அதே சமயம் இவர் அநீதி, ரசவாதி போன்ற படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். இது தவிர ஒன்ஸ்மோர் எனும் திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார் அர்ஜுன் தாஸ். இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 10 அன்று அஜித், ஆதிக் கூட்டணியில் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இவர் எப்படி அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு தன்னுடைய சிறப்பான நடிப்பினால் பதிலடி கொடுத்திருந்தார் அர்ஜுன் தாஸ்.
இதற்கிடையில் இவர் மலையாள சினிமாவில் அறிமுகமாக போகிறார் என பல தகவல்கள் வெளிவந்தது. அதன்படி அர்ஜுன் தாஸ் மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்திற்கு ‘TORPEDO’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நஸ்லேன், கணபதி, பகத் பாசில் ஆகியோரும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை துடரும் படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி இயக்குகிறார்.
ஜிம்சி ஹாலித் இதற்கு ஒளிப்பதிவு செய்ய சுசின் ஷியாம் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் இதன் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் ஆக்சன் திரில்லரில் உருவாகும் போல் தெரிகிறது. இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான மற்ற அப்டேட்கள் வழியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -