அர்ஜுன் தாஸ் நடிக்கும் ரசவாதி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றார். பின்னர் ஹீரோவாக உருவெடுத்த அர்ஜுன் தாஸ் அநீதி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் ஹீரோவாக களமிறங்கி வருகிறார். அடுத்ததாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் ரசவாதி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மௌன குரு, மகாமுனி குளித்த படங்களின் மூலம் பிரபலமான சாந்தகுமார் இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு தமிழ் இசை அமைக்கிறார். சிவா மற்றும் சரவணன் இளவரசு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கின்றன. ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து டீசரும் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரெய்லரில் ஆக்சன் காட்சிகளும் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் மே 10ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.