நடிகர் அருண் விஜய் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். இவர் நடிப்பில் வெளியான தடம், தடையறத் தாக்க, குற்றம் 23 போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த ஜனவரி மாதம் அருண் விஜய் நடிப்பில் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான மிஷன் சாப்டர் 1 திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே சமயம் வணங்கான் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் 2024 ஜூலையில் வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து அருண் விஜய் ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் அருண் விஜய் உடன் இணைந்து தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தை மான் கராத்தே பட இயக்குனர் திருக்குமரன் இயக்கி வருகிறார். இந்த படமானது பி டி ஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சாம் சி எஸ் – ன் இசையுடன் உருவாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
The action packed first schedule of #RettaThala is officially wrapped 🎬
Excited to share the stylish look of our very own @arunvijayno1💥in this high octane ride⭐️Produced By- @BTGUniversal
@bbobbyBTG Head of Strategy- @ManojBeno
Directed… pic.twitter.com/b7VHdv28Dv
— BTG Universal (@BTGUniversal) June 7, 2024
அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.