spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன் திரைப்பயணத்தில் 'வணங்கான்' ஒரு முக்கியமான பாகம்.... பாலாவிற்கு நன்றி சொன்ன அருண் விஜய்!

என் திரைப்பயணத்தில் ‘வணங்கான்’ ஒரு முக்கியமான பாகம்…. பாலாவிற்கு நன்றி சொன்ன அருண் விஜய்!

-

- Advertisement -

இயக்குனர் பாலா குறித்து அருண் விஜய் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.என் திரைப்பயணத்தில் 'வணங்கான்' ஒரு முக்கியமான பாகம்.... பாலாவிற்கு நன்றி சொன்ன அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்தது ரெட்ட தல எனும் திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார் அருண் விஜய். இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தையே வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க ஜி வி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய் தவிர ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, சாயா தேவி, மிஸ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், ட்ரைலர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது. அடுத்தது இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் பாலாவிற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மன நெகிழ்வுடன் கனத்த இதயத்துடன் என் இயக்குனர் பாலா சார் அவர்களுக்கு, நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும் உங்களைக் கண்டு வியந்து ஒரு நடிகனாக, எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என ஏங்கிய எனக்கு தங்களின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நம் படப்பிடிப்பின் போது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்போது வெள்ளித்திரையில் காணும் போது என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்ததற்கு உங்களை வணங்குகிறேன்.

we-r-hiring

என்னுடைய திரை உலக பயணத்தில் வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. இந்த படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து பக்கபலமாக இருந்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உங்கள் அருண் விஜய்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ