வணங்கான் படத்தில் சூர்யாவுக்கு பதில் அருண் விஜய்
அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ் கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’ திரைப்படம்
பாலா இயக்கத்தின் உருவாக இருந்த திரைப்படம் வணங்கான் படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தமாகினார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் நடிகர் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பாலாவின் சொந்த தயாரிப்பில் இந்த படத்தை தயாரிக்க அருண் விஜய் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார்.
தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவாக உள்ள ‘வணங்கான்’ படத்தில் கதாநாயகியை மாற்றியுள்ளார் இயக்குநர் பாலா. நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு பதிலாக ‘ஜடா’ திரைப்பட நாயகி ரோஷிணி பிரகாஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ் கூட்டணியில் ‘வணங்கான்’ படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் படமாக்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.