Homeசெய்திகள்சினிமாபொங்கல் ரிலீஸுக்கு தயாரான அருண் விஜயின் 'மிஷன்'.... தேதியை அறிவித்த படக்குழு!

பொங்கல் ரிலீஸுக்கு தயாரான அருண் விஜயின் ‘மிஷன்’…. தேதியை அறிவித்த படக்குழு!

-

- Advertisement -

பொங்கல் ரிலீஸுக்கு தயாரான அருண் விஜயின் 'மிஷன்'.... தேதியை அறிவித்த படக்குழு!அருண் விஜய் தற்போது பாலா இயக்கி வரும் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

அதேசமயம்அ ருண் விஜய், ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவாகும் மிஷன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இதில் அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா ஷஜயன், அபி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக பட குழுவினர் ஏற்கனவே போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரிலீஸ் தேதியையும் லாக் செய்துள்ளனர். அதன்படி இப்படம் வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் ரிலீஸுக்கு தயாரான அருண் விஜயின் 'மிஷன்'.... தேதியை அறிவித்த படக்குழு!

சில மாதங்களுக்கு முன் மிஷன் படத்தில் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ