நடிகர் அருண் விஜய், இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வனங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்திருந்தார் அருண் விஜய்.
இந்தப் படத்தை ஏ.எல். விஜய் இயக்கி இருந்த நிலையில் லைகா ப்ரோடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இதற்கு ஜிவி பிரகாஷ் இசை இசையமைத்திருந்தார் சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து நிமிஷா சஜயன், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வந்த இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இருப்பினும் ஒரு சில காரணங்களால் இந்த படம் இதுவரை ஓடிடி வராமல் இருந்தது ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் தற்போது இந்த படம் விரைவில் ஓடிடிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிம்ப்ளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே மார்ச் 18ஆம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


