சார்பட்டா பரம்பரை 2 படத்தின் ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் பா. ரஞ்சித், கடந்த 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை 2 எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார். டான்சிங் ரோஸ் சபீர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குத்துச்சண்டை சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியான நிலையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ஆர்யாவின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை 2 திரைப்படம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பா. ரஞ்சித் தற்போது இயக்கி வரும் வேட்டுவம் திரைப்படத்தினால், சார்பட்டா பரம்பரை 2 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நடிகர் ஆர்யா சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனக் கூறியுள்ளார்.
மேலும் தற்போது ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். எனவே சார்பட்டா பரம்பரை 2 படம் குறித்த மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.