Homeசெய்திகள்சினிமாபிரபல நடிகரின் மகளைக் காதலித்து கரம்பிடிக்கும் அசோக் செல்வன்… திருமணம் எப்போது தெரியுமா?

பிரபல நடிகரின் மகளைக் காதலித்து கரம்பிடிக்கும் அசோக் செல்வன்… திருமணம் எப்போது தெரியுமா?

-

நடிகர் அசோக் செல்வன் திருமணம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் அசோக் செல்வன் நல்ல வரவேற்பைப் பெறும் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்து வருகிறார். ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் நெகிடி, கூட்டத்தில் ஒருவன், ‘ஓ மை கடவுளே‘ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தார். கடைசியாக அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் அசோக் செல்வனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. அசோக் செல்வனின் வருங்கால மனைவியும் ஒரு நடிகை தானாம்.
ஆம், நடிகர் அருண் பாண்டியன் மூத்தமகள் கீரத்தி பாண்டியன் தான் மணமகள் என்று சொல்லப்படுகிறது.

கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அசோக் செல்வனும், கீர்த்தியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இருவீட்டார் தரப்பிலும் இவர்கள் காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்துள்ளதால் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறதாம்.
திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

MUST READ