இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு அசோக் செல்வன், வாணி போஜன், ரித்திகா சிங் ஆகியோரின் நடிப்பில் ஓ மை கடவுளே எனும் திரைப்படத்தை இயக்கிதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதைத் தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டிராகன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படமானது அடுத்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் பரவி வந்தன. அதன்படி சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. அதைத்தொடர்ந்து சிம்புவின் அடுத்த படத்தில் அனிருத் தான் இசையமைக்கப் போகிறார் என்றும் மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்றும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன. இது தொடர்பாக அஸ்வத் மாரி முத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் என்னுடைய வணக்கம்.
Hello friends and str fans ! Except STR , production and myself nothing else is finalised ! If anything we finalise we ll be the first one to share the news with u 🙂 but we are HEARING you 🔥 u ll never be disappointed 👍
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) October 24, 2024
சிம்புவின் அடுத்த படத்தில் சிம்புவையும் தயாரிப்பு நிறுவனத்தையும் என்னையும் தவிர வேறு எதுவும் முடிவு செய்யப்படவில்லை. அப்படி நாங்கள் வேறு எதையும் முடிவு செய்தால் அந்த தகவலை உங்களுடன் தான் முதலில் பகிர்வோம். எனவே நீங்கள் ஒருபோதும் ஏமாறக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த பதிவின் மூலம் சிம்புவின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் கதாநாயகி குறித்த தகவல் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.