Homeசெய்திகள்சினிமாபுதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் அஸ்வத் மாரிமுத்து- தனுஷ்!

புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் அஸ்வத் மாரிமுத்து- தனுஷ்!

-

- Advertisement -

அஸ்வத் மாரிமுத்து, தனுஷ் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் அஸ்வத் மாரிமுத்து- தனுஷ்!

தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதைத்தொடர்ந்து இவர் அதை இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. அதேசமயம் அஸ்வத் மாரிமுத்து, சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் அஸ்வத் மாரிமுத்து- தனுஷ்!மேலும் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் புதிய படம் உருவாகும் எனவும் இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் அஸ்வத் மாரிமுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இவ்வாறு டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய படத்திற்கான பேச்சுவார்த்தையில் அஸ்வத் மாரிமுத்து- தனுஷ்!இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் அல்லது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய படம் தனுஷ், அஸ்வத் ஆகிய இருவரும் ஏற்கனவே கமிட் ஆகியுள்ள திட்டங்களை முடித்த பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ