இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, STR 51 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தமிழ் சினிமாவில் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். வித்தியாசமான திரைக்கதையை கொடுத்து தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அஸ்வத். அதைத்தொடர்ந்து இவர், பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கியிருந்த ‘டிராகன்’ திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதன் பிறகு அஸ்வத் மாரிமுத்து, சிம்புவின் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக STR 51 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிம்பு ‘GOD OF LOVE’ என்ற கேரக்டரில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரிலேயே சிம்புவின் வின்டேஜ் ஸ்டைல் இடம் பெற்றிருந்தது. இது ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அஸ்வத் மாரிமுத்து, STR 51 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “ஓ மை கடவுளே மற்றும் டிராகன் படத்திலிருந்த அதே எமோஷன் STR 51 படத்திலும் இருக்கும். இந்த படம் சிம்பு ரசிகர்களையும், ஜெனரல் ஆடியன்ஸையும் திருப்திப்படுத்தும். தலைவன் படத்தில் காதல் இல்லாமையா?” என்று தெரிவித்துள்ளார்.