அட்டகத்தி தினேஷ் நடிக்கும் தண்டகாரண்யம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
அட்டகத்தி தினேஷ் கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி எனும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து குக்கூ, விசாரணை என பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். மேலும் இவர் விடுதலை 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் லப்பர் பந்து திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அட்டகத்தி தினேஷ். இதற்கிடையில் இவர், பா.ரஞ்சித் தயாரிக்கும் தண்டக்காரண்யம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் உடன் இணைந்து கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தினை இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். பிரதீப் காளி ராஜா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஆர்கே செல்வா எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தால் இப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.