spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாயும் புலி படத்தில் பாய்ந்த பைக்... ரஜினி புகைப்படம் வைரல்....

பாயும் புலி படத்தில் பாய்ந்த பைக்… ரஜினி புகைப்படம் வைரல்….

-

- Advertisement -
பாயும் புலி திரைப்படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது ரஜினிகாந்த் அமர்ந்து எடுத்துக் கொண்டபுகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த மே மாதம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோஸில் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதனை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். இங்கு 1960-களில் தொடங்கி தமிழ் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார்கள் உள்ளிட்ட சினிமா தொடர்பான பொருட்கள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை தவிர, மற்ற அனைத்து நாட்களில் செயல்படும் இந்த அருங்காட்சியகம் காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணிக்கு மூடப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் ரஜினி, கமல், சரத்குமார், அரவிந்த்சாமி என அனைத்து முன்னணி நடிகர்களும் பயன்படுத்திய கார், பைக், ஆடைகள், ஆயுதங்கள் என சினிமா பொருட்கள் அனைத்தும் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. படத்தின் விவரத்தை பதிவு செய்து இந்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன.
we-r-hiring

இந்நிலையில், பாயும் புலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய பைக்கும், ஏவிஎம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஏவிஎம். நிறுவனம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ஒரு பொக்கிஷமான தருணம். பாயும் புலியில் சூப்பர் ஸ்டார் பயன்படுத்திய புகழ்பெற்ற பைக்கை பார்க்க வாருங்கள் என பதிவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த பைக்கில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ