Homeசெய்திகள்சினிமாபாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'..... ரிலீஸ் எப்போது?

பாலா, அருண் விஜய் கூட்டணியின் ‘வணங்கான்’….. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

பிரபல இயக்குனர் பாலா சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.பாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'..... ரிலீஸ் எப்போது? தற்போது இவர் வணங்கான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யா தான் ஹீரோவாக நடித்து வந்தார். அதேசமயம் இந்த படமும் சூர்யாவின் தயாரிப்பில் தான் உருவாகி வந்தது. அதன்படி சில நாட்கள் படப்பிடிப்புகளும் நடந்து வந்தது. ஆனால் பாலா – சூர்யா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா இந்த படத்தில் இருந்து விலகினார். எனவே அவருக்கு பதிலாக இயக்குனர் பாலா நடிகர் அருண் விஜயை நடிக்க வைத்தார். சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.பாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'..... ரிலீஸ் எப்போது?

இந்த படத்தில் அருண் விஜய் தவிர ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. எனவே அடுத்ததாக படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பாலா, அருண் விஜய் கூட்டணியின் 'வணங்கான்'..... ரிலீஸ் எப்போது?அதன்படி வணங்கான் திரைப்படத்தை 2024 ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனராம். இருப்பினும் ஜூலை மாதத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளியாக இருப்பதால் படமானது தள்ளிப்போகுமா? அல்லது திட்டமிட்டபடி திரையிடப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் ரிலீஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ