Homeசெய்திகள்சினிமாதயாரிப்பாளர் ஜெய்குமார் மறைவுக்கு பாரதிராஜா அஞ்சலி

தயாரிப்பாளர் ஜெய்குமார் மறைவுக்கு பாரதிராஜா அஞ்சலி

-

தயாரிப்பாளர் ஜெய்குமார் மறைவுக்கு பாரதிராஜா அஞ்சலி
சினிமா தயாரிப்பாளர் ஜெய்குமார் மறைவிற்கு இயக்குநர் பாரதிராஜா, கலைப்புலி தாணு ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பாரதிராஜா

பாரதிராஜா இயக்கத்தில் உருவான ‘புதுநெல்லு புதுநாத்து’ பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.என்.ஜெய்குமார் உடல்நலக்குறைவால் காலமானார். இவர் பல ஆண்டுகளாக இயக்குநர் பாரதிராஜாவிடம் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றி உள்ளார். தற்போது அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்படுள்ளது.

ஜெய்குமார்

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சித்ராலட்சுமணன், முரளி, நடிகர் மனோஜ் பாரதி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் திரைப்பட இயக்குனர்கள், தொழில் அதிபர்கள் நேரில் சென்று ஜெய்குமார் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

MUST READ