spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'என் மகன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான்'..... மனோஜ் குறித்து பேசிய பாரதிராஜா!

‘என் மகன் நிச்சயம் பெரிய ஆளாக வருவான்’….. மனோஜ் குறித்து பேசிய பாரதிராஜா!

-

- Advertisement -

இயக்குனர் இமயம் பாரதிராஜா சினிமா துறையில் கிட்டத்தட்ட 60 வருடங்களாக பணியாற்றி வருகிறார். 200க்கும் மேலான ஆர்டிஸ்ட்களை உருவாக்கியுள்ளார்.

தற்போது இவரின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக உருவெடுத்துள்ளார். அதன்படி இயக்குனர் சுசீந்திரன் தயாரிப்பில் மார்கழி திங்கள் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேசமயம் மார்கழி திங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சீமான்,கார்த்தி, சிவக்குமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அதில் பேசிய பாரதிராஜா, ” மகனை தான் படம் நடிக்க சொன்னேன். ஆனால் அவன் நான் இயக்குனராக தான் ஆவேன் என்று உறுதியாக இருந்தான். சுசீந்திரன் தான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்தார். நான் என் மகனிடம் நடிகனாக இருந்து இயக்குனராக மாறுவது சுலபம் இல்லை என்று கூறினேன். ஆனால் படப்பிடிப்பில் அவன் செய்த செயல்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது அப்போதே புரிந்து கொண்டேன் என் மகன் மிகப்பெரிய ஆளாக வருவான் என்று. அவன் இயக்கிய மார்கழி திங்கள் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும். இப்போது ட்ரெய்லர் தான் காட்டியிருக்கிறான். அவன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

MUST READ