விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8 விரைவில் தொடங்க இருக்கிறது.
பல ரசிகர்களின் ஃபேவரைட் ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தான் சில கமிட்மெண்டுகள் காரணமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவதில்லை என கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அடுத்தடுத்த ப்ரோமோ வீடியோக்களும் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் யார் யார் போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றன. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி, நடிகர் ரஞ்சித், திவ்யா துரைசாமி, குரேஷி, பப்லு பிரித்விராஜ், டிடிஎஃப் வாசன், அக்ஷிதா அசோக், அமலா சாஜி, ரித்திகா, மா கா பா, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்தது நடிகை பூனம் பாஜ்வா இப்போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவரைப் போட்டியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனென்றால் பூனம் பாஜ்வா பெரும்பாலான படங்களில் கவர்ச்சியாக நடித்து பலரின் பேவரைட் ஹீரோயினாக மாறினார். எனவே இவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியானது நிச்சயம் சூடு பிடிக்கும் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.