spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் நிக்சன் வெளியிட்ட பதிவு.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பிக் பாஸ் நிக்சன் வெளியிட்ட பதிவு…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

-

- Advertisement -

பிக் பாஸ் நிக்சன் வெளியிட்ட பதிவு.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ரியாலிட்டி ஷோ என்பதால் இதில் பல சண்டைகளும் கலவரங்களும் நிகழ்ச்சியை சுவாரசியமாக கொண்டு செல்லும். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி தொடங்கப்பட்டு கடந்த 2024 ஜனவரி மாதம் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பூர்ணிமா, மாயா, விசித்திரா, தினேஷ், மணி,சரவண விக்ரம், நிக்சன், அர்ச்சனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இறுதியில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை விஜேஅர்ச்சனா தட்டி சென்றார்.

இந்நிகழ்ச்சியில் இவர்களுக்கு இடையில் ஒரு சில காரணங்களால் மோதல் ஏற்பட்டதை நாம் காண முடிந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்களின் மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதன்படி சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விசித்ரா மற்றும் தினேஷ் ஆகியோர் கலந்து கொள்ள வந்த நிலையில் அவர்களுக்கு இடையேயான மோதல் காரணமாக அந்நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் நிக்சன் வெளியிட்ட பதிவு.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைந்த பின்பும் தனித்தனி குரூப் ஆக இருந்து வருகின்றனர். அதன்படி விஷ்ணு விஜய், கூல் சுரேஷ், அர்ச்சனா, பிராவோ ஆகியோர் ஒரு குரூப் ஆக நேற்று வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசினார்கள். இது சம்பந்தமான புகைப்படத்தை பிராவோ தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.பிக் பாஸ் நிக்சன் வெளியிட்ட பதிவு.... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

we-r-hiring

இந்நிலையில் இதற்கு போட்டியாக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என இன்னொரு குரூப்பான மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், அனன்யா, அக்ஷயா உள்ளிட்டோர் நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் நிக்சன். அந்தப் புகைப்படத்துடன் ‘நாங்கள் Bully Gang என்று பதிவிட்டிருந்தார்’. நிக்சனின் இந்த பதிவிற்கு ஆதரவாக பலர் கமெண்ட் செய்து வந்தாலும் பலரும் நிக்ஷனை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

MUST READ