பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் டாப் 10 போட்டியாளர்கள் யார் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அதைத் தொடர்ந்து சில நாட்களில் 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். அதில் 14 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டும் பிக் பாஸ் வீட்டில் எஞ்சியுள்ளனர். அந்த வகையில் ராணவ், ஜாக்குலின், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா போன்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி முடிவடைய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருக்கிறது. எனவே ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கி விறுவிறுப்பாக செல்கிறது. அதன்படி நேற்று (டிசம்பர் 29) ராணவ் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அன்சிஷா வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து தீபக், ராணவ், மஞ்சரி, ரயான், பவித்ரா, விஷால் உள்ளிட்ட 8 பேர் இந்த வார நாமினேஷனில் இடம் பிடித்துள்ளதாக ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்குமரன், தீபக், ஜாக்குலின், சௌந்தர்யா, மஞ்சரி ஆகியோர் மக்கள் மனதை வென்று வலுவான இடத்தை பிடித்து முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ளார்கள். அடுத்தது பவித்ரா, ரயான், ராணவ், விஷால், அருண் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். எனவே இனிவரும் நாட்களில் இந்த பட்டியலில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.