Homeசெய்திகள்சினிமாபிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவர் தான்!

பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவர் தான்!

-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவர் தான்! அதாவது இந்த நிகழ்ச்சி சீரியல்களை விட டிஆர்பியில் நம்பர் 1 ஆக இருக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாகர்ஜுனா, சல்மான்கான் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். அதன்படி தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். அதாவது இதுவரை ஒளிபரப்பான 7 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் சினிமாவில் பல கமிட்மெண்ட்கள் இருப்பதால் நேற்று (ஆகஸ்ட் 6) 8வது சீசனை தான் தொகுத்து வழங்கப்போவதில்லை என அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தார் கமல். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த ஹோஸ்ட் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி கமல் நேற்று அறிக்கை வெளியிட்ட அடுத்த நிமிடத்திலிருந்து பிக் பாஸ் சீசன் 8 ஐ தொகுத்து வழங்கப்போவது இவர் தான் என்று சிம்பு, பிரகாஷ்ராஜ், சூர்யா, விஜய் சேதுபதி, ரம்யா கிருஷ்ணன் என பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. பிக் பாஸ் சீசன் 8-ஐ தொகுத்து வழங்கப்போவது கண்டிப்பாக இந்த இருவரில் ஒருவர் தான்!ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், உண்மையில் விஜய் டிவியில் நிறுவனம் சிம்பு, சூர்யா, விஜய் சேதுபதி ஆகிய மூவரையும் தொடர்பாக அணுகியதாகவும் அதில் சூர்யா சில காரணங்களால் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் எனவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. எனவே சிம்பு அல்லது விஜய் சேதுபதி ஆகிய இருவரில் ஒருவர்தான் பிக் பாஸ் சீசன் 8இன் அடுத்த போஸ்ட்டாக இருக்க முடியும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ