spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிக்பாஸ் செட் அமைக்கும் பணிகள் தீவிரம்.... கீழே விழுந்து வடமாநில தொழிலாளர் படுகாயம்!

பிக்பாஸ் செட் அமைக்கும் பணிகள் தீவிரம்…. கீழே விழுந்து வடமாநில தொழிலாளர் படுகாயம்!

-

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தொழிலாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.பிக்பாஸ் செட் அமைக்கும் பணிகள் தீவிரம்.... கீழே விழுந்து வடமாநில தொழிலாளர் படுகாயம்!

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கடந்த ஏழு வருடங்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை அவரால் தொகுத்து வழங்க முடியாத நிலையில் அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி களத்தில் இறங்கியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் போட்டியாளர்களின் லிஸ்ட்கள் லீக் ஆகி வருகின்றன. இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சமயத்தில் தான் உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாஹின் கான் என்பவர் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் செய்து வந்த நிலையில் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.பிக்பாஸ் செட் அமைக்கும் பணிகள் தீவிரம்.... கீழே விழுந்து வடமாநில தொழிலாளர் படுகாயம்! கீழே விழுந்ததில் அவருக்கு கை, இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மேலும் படுகாயமடைந்த அந்த வட மாநில தொழிலாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து நசரத்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ