நடிகர் சத்யராஜ் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றவர். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் சத்யராஜ். அதன்படி பல படங்களில் நடித்துவரும் சத்யராஜ், ஜாக்சன் துரை 2, வெப்பன் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் சமீப காலமாக நடிகர் சத்யராஜ், பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் மோடியாக நடிக்கப் போகிறார் என்று பல தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆனால் அதற்கு சத்யராஜ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சத்யராஜ், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கனக்கச்சிதமாக நடித்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் மிகப் பொருத்தமானவராக இருப்பார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “மோடியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் நடிக்கவில்லை. அப்படியே நடித்தால் என்னுடைய நண்பர் மணிவண்ணன் போன்ற ஒரு இயக்குனர் படத்தை இயக்கினால் அது நன்றாக இருக்கும். இல்லையென்றால் விஜய் மில்டன் இயக்கினார் என்றாலும் சரிதான். இவர்களை தவிர பா ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் பிரதமர் மோடியின் பயோபிக் படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
- Advertisement -