பைசன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியான படங்களில் பைசன் திரைப்படமும் ஒன்று. இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மாரி செல்வராஜின் மற்ற படங்களை போல் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பலரும் பாராட்டியதோடு, துருவ் விக்ரமுக்கும் இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்துள்ளது. தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதன்படி உலகம் முழுவதும் இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக ஏற்கனவே படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 21ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனமும், அப்பிளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


