- Advertisement -
2007-ம் ஆண்டு திரைக்கு வந்த பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம் பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தான் கார்த்தி நடிகராக அறிமுகம் ஆகினார். அமீர் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே.ஈ.ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தை தயாரித்து இருந்தார். பருத்தி வீரன் திரைப்படம், தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று என்றே கூறலாம். முதல் படத்திலேயே தனது அசாத்திய நடிப்பின் மூலம் முத்திரை பதித்தார் நடிகர் கார்த்தி.

யோவ் சித்தப்பா, கூடயே இருக்கையே செவ்வாழை, ஆகிய வசனங்கள் தமிழ் சினிமாவின் கல்ட் வசனங்கள். படம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கடந்த நவம்பர் மாதம் திடீரென ஒரு புதிய சர்ச்சை வந்தது. ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து அவமானப்படுத்தும் விதமாக பேசினார். இதனால் இயக்குனர் அமீர் மிகவும் மனமடைந்து உண்மை தெரிந்தவர்களும் அமைதியாக உள்ளீர்களே என்று தன் வேதனையை வெளிப்படுத்தினார். இதையடுத்து, தமிழ் திரையுலகில் பலரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கண்டங்கள் வலுத்ததும், அவர் மன்னிப்பு கோரினார்.




