Homeசெய்திகள்சினிமாசூர்யாவின் கங்குவா படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்!

சூர்யாவின் கங்குவா படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்!

-

கங்குவா திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க சிறுத்தை சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கோவை சரளா, திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படம் ஒரு வரலாற்று சரித்திர படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் மற்றும் சென்னை பகுதிகளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் படமாக்கப்பட்டது. தற்போது 80 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவில் பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.கங்குவா என்பது நெருப்பு மகன் என்று பொருள் படும். அதற்கு ஏற்றார்போல் சூர்யா காட்டுத் தனமான லுக்கில் மிரள வைத்துள்ளார். இந்த படம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் பாபி டியோல் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இவர் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் பேங்காக்கில் படமாக்கப்பட உள்ளது என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே நட்டி நடராஜன் இந்த படத்தில் மற்றொரு வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ