பாபி சிம்ஹா நடிக்கும் நான் வயலன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் பாபி சிம்ஹா, கடந்த 2012 இல் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர். அதைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, சூது கவ்வும் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் ஜிகர்தண்டா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா கடைசியாக ரஸாக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நான் வயலன்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நான் வயலன்ஸ் படத்தில் பாபி சிம்ஹாவுடன் இணைந்து யோகி பாபு, மெட்ரோ சிரிஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஏ கே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -