நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ரஜினியின் 171வது படமாக உருவாக உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சத்யராஜ், ஸ்ருதிஹாசன், ஷோபனா, சாண்டி மாஸ்டர் போன்ற பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இவ்வாறு எதிர்பார்ப்புகளை அதிகரித்து வரும் கூலி படத்தில் பாலிவுட் நடிகர்கள் நடிக்க மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான நிலையில் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தையும் மல்டி ஸ்டாரர் படமாக உருவாக்க திட்டமிட்டு வருகிறார். அதன்படி சிவகார்த்திகேயன், ராகவா லாரன்ஸ், பிரித்விராஜ், மம்மூட்டி போன்ற நடிகர்களின் பெயர்களும் அடிபடுகின்றன. மேலும் நடிகர் ஷாருக்கானிடம் கூலி படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாம். ஆனால் ஒரு சில காரணங்களால் ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து ரன்வீர் சிங்கிடம் பேசப்பட்டதாம். ஆனால் அவரும் தெறித்து ஓடியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் ஏன் ரஜினியின் கூலி படத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் மறுப்பு தெரிவிக்கிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். அதாவது ஜெயிலர் திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் மோகன்லால், சிவராஜ்குமார் கதாபாத்திரத்தை போல் பெரிதளவும் கொண்டாடப்படவில்லை. இதன் காரணமாக கூட கூலி படத்தில் பாலிவுட் நடிகர்கள் நடிக்க மறுப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -