Homeசெய்திகள்சினிமாவிஜயின் 'கோட்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

விஜயின் ‘கோட்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

-

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.விஜயின் 'கோட்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு!

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லியோ. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி படமானது வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. ஆக்சன் நிறைந்த கதைகளத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஏகோபோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

MUST READ