Homeசெய்திகள்சினிமாசேரன் இயக்கும் வெப் சீரிஸ்....'ஜர்னி' ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

சேரன் இயக்கும் வெப் சீரிஸ்….’ஜர்னி’ ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

சேரன் இயக்கும் வெப் சீரிஸ்....'ஜர்னி' ரிலீஸ் குறித்த அறிவிப்பு!!தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரும் நடிகர் வலம் வரும் சேரன் வெற்றிக் கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற தேசிய விருது பெற்ற திரைப்படங்களை இயக்கியவர். சொல்ல மறந்த கதை, பொக்கிஷம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து புகழ் பெற்றார். பிக் பாஸ் சீசன் 3யிலும் பங்கேற்றார். நல்ல கதையம்சமும் கருத்தும் உடைய படங்களை தேர்ந்தெடுத்து அவ்வப்போது நடித்து வருபவர் சேரன். சமீபத்தில் இவர் நடிப்பில் தமிழ் குடிமகன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் சேரன் இயக்கியுள்ள ஜர்னி (Journey) வெப் சீரிஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சோனி லைவ் ஓடிடி தளத்திற்காக சேரன் இந்த வெப் சீரிசை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான படப்பிடிப்புகள் துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஐந்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கொண்டுள்ள இந்த வெப் சீரிஸில் விவசாயம் தொடர்பான ஒரு எபிசோடு இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வன்முறையான கதைக்களங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களை ஒப்பிடுகையில் மண் மணம் மாறாத கதையை இந்த வெப் சீரிஸின் மூலம் கையில் எடுத்துள்ளார் சேரன். இந்த வெப் சீரிஸ் நிச்சயமாக மக்களை சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் 2024 ஜனவரி 12ஆம் தேதி சோனி லைவ் ஓ டி டி தளத்தில் வெளியாக இருப்பதாக ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த ட்ரெய்லர் வெப் தொடரின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.சேரன் இயக்கும் வெப் சீரிஸ்....'ஜர்னி' ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

we-r-hiring

மேலும் இந்த வெப் சீரிஸில் சரத்குமார், ஆரி, பிரசன்னா, கலையரசன், திவ்யபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ