spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,

we-r-hiring

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து வருந்தினேன். பல குரல்களில் நகைச்சுவையாக பேசும் ஆற்றல் படைத்தவர். தன்னுடைய ஒலி நாடாக்கள் வழியாக தமிழ்நாடு முழுவதும் அறிமுகமானார். ”காமெடி டைம்” நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாடு மக்களின் இல்லங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிற அளவிற்கு பாராட்டைப் பெற்றவர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தன்னுடைய கருத்துக்களை ஆழமாக பதிவு  செய்யக்கூடியவர்.

திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது.

அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சீமான் இரங்கல் செய்தி,

நகைச்சுவை நடிகர், வறியோர்க்கு உதவும் மனிதநேய மாண்பாளர்,  அன்புச்சகோதரர் மயில்சாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த துயரமும் அடைந்தேன். தனது தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால், கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்த சகோதரர் மயில்சாமி அவர்களின் இழப்புபென்பது தமிழ்க்கலையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

தயாநிதி மாறன் இரங்கல் பதிவு,

அன்புச்சகோதரர் மயில்சாமி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

பல குரல் மன்னனாக பிரபலமாகி பின்னர் தமிழ் திரை உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்த நகைச்சுவை நடிகர் மயில்சாமி அவர்களின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியுற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தயாநிதி மாறன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

MUST READ