Homeசெய்திகள்சினிமாவிக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் 'சியான் 62' அப்டேட்!

விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் ‘சியான் 62’ அப்டேட்!

-

நடிகர் விக்ரம் தனது தனித்துவமான நடிப்பின் போல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ஒரு சில காரணங்களால் ஏற்படும் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. விக்ரம் பிறந்தநாளில் வெளியாகும் 'சியான் 62' அப்டேட்!இந்நிலையில் விக்ரம் பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள இந்த படம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் விக்ரம் சித்தா பட இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். அதன்படி இவர்களின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்திற்கு சியான் 62 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, துஷாரா விஜயன், சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பிலேயே வைத்துள்ளது.

இந்நிலையில் தான் நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வருகின்ற “ஏப்ரல் 17 இல் சியான் 62 அப்டேட் லோடிங்” என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் டைட்டில் ப்ரோமோ நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ