Homeசெய்திகள்சினிமாசியான் விக்ரமின் 'தங்கலான்' திரை விமர்சனம் இதோ!

சியான் விக்ரமின் ‘தங்கலான்’ திரை விமர்சனம் இதோ!

-

தங்கலான் படத்தின் திரை விமர்சனம்.சியான் விக்ரமின் 'தங்கலான்' திரை விமர்சனம் இதோ!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டெடுக்கப்படுகிறது என்பதை பின்னணியாக கொண்டு தங்கலான் படம் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களின் ஆதிக்கத்தின் கீழ் தங்கலான் மக்கள் அடிமையாக நடத்தப்படுகிறார்கள். சியான் விக்ரமின் 'தங்கலான்' திரை விமர்சனம் இதோ!இந்த நிலையை மாற்ற வேண்டும் மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் இன்று விக்ரம் நினைக்கிறார். அந்த சமயத்தில் வெள்ளைக்காரன் ஒருவனின் மூலம் தங்கம் தேடும் வேலை இவர்கள் அனைவருக்கும் கிடைக்கிறது. அந்த வேலையை செய்தால் அதிக சம்பளமும் கிடைக்கும் அதன் மூலம் நிலங்களை திரும்ப பெற்று விடலாம் என்று தனது மக்களை தங்கம் தேடும் வேலைக்கு அழைத்து வருகிறார் விக்ரம். இதற்குப் பின்னால் நம் மக்கள் என்னென்ன சவால்களை சந்திக்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுதான் படத்தின் மீதி கதை.சியான் விக்ரமின் 'தங்கலான்' திரை விமர்சனம் இதோ!

இந்த படம் அனைத்து காலகட்டத்திற்கும் பொருந்தும் வகையில் நிலம் தொடர்பான அரசியல் குறித்து பேசி இருக்கிறது. படத்தின் முதல் பாதி வலுவாக அமைந்திருப்பதனால் படம் சுவாரசியமாக செல்கிறது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சலிப்பை தருகின்றன. அதிலும் திரைக்கதை சற்று குழப்பத்தை உண்டாக்குகிறது. விக்ரமின் அபார நடிப்பு படத்தை தாங்கி பிடித்துள்ளது. அவரைப் போல் பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் ஆகியோரும் தனது நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர். சியான் விக்ரமின் 'தங்கலான்' திரை விமர்சனம் இதோ!அனைவருமே படத்திற்காக கடினமாக உழைத்துள்ளனர். அடுத்தது ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. படத்தில் தொய்வு ஏற்படும் இடங்களில் வெறித்தனமான ஜிவி பிரகாஷின் வெறித்தனமான இசை ரசிகர்களை கட்டி போடுகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஆனாலும் ஒரு சில இடங்களில் கனெக்ட் ஆகாத திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

MUST READ