தளபதி என்று கொண்டாடப்படும் நடிகர் விஜய் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தி கோட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. அடுத்ததாக விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தனது 69 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் படப்பிடிப்பு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தையும் தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் விஜய் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார் என்று தகவல் கசிந்துள்ளது. அதாவது நடிகர் விஜய் ஏற்கனவே வைத்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் Volvo ஆகிய கார்களை விற்று விட்டாராம். அதற்கு பதிலாக Lexus LM என்ற புதிய காரை வாங்கி இருக்கிறாராம்.
Actor Vijay ‘s new Lexus LM. On road price cost around 2.51cr-3.13cr (depends on the variant) pic.twitter.com/1pJBCBPCFm
— Rajasekar (@sekartweets) August 13, 2024
இந்த புதிய காரின் மதிப்பு கிட்டத்தட்ட 2.15 முதல் 3.13 கோடி ரூபாய்வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே விஜய் தனது வீட்டிலிருந்து தான் புதிதாக வாங்கியுள்ள காரில் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.