Homeசெய்திகள்சினிமாநகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிக்கும் 'பேச்சி' ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிக்கும் ‘பேச்சி’ ….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

பால சரவணன் நடிக்கும் பேச்சி படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிக்கும் 'பேச்சி' ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து தனது நடிப்பு திறமையால் ஹீரோவாக உருவெடுத்த நடிகர்கள் பலர். அந்த வகையில் நாகேஷ், கவுண்டமணியை தொடர்ந்து சந்தானம், யோகி பாபு, சூரி, சதீஷ் ஆகியோர் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகின்றனர். அதே சமயம் நகைச்சுவை நடிகர் பால சரவணன் தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிக்கும் 'பேச்சி' ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் பால சரவணன் குட்டி புலி, பண்ணையாரும் பத்மினியும், வேதாளம், அயலான் உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்து வருகிறார் பால சரவணன். அது மட்டும் இல்லாமல் இவர் பேச்சி எனும் படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தை ராமச்சந்திரன் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். ராஜேஷ் முருகேசன் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை வெயிலோன் நிறுவனமும் வீரஸ் புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. நகைச்சுவை நடிகர் பால சரவணன் நடிக்கும் 'பேச்சி' ..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!இப்படம் ஹாரர் சம்பந்தமான கதை படத்தில் உருவாகி வருகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் 2024 ஜூலை மாதத்தில் வெளியாக இருப்பதாகவும் அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ