சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தினை ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த கைதி, மாஸ்டர், விக்ரம் லியோ ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டாரை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ஐதராபாத், விசாகப்பட்டினம், சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Team #Coolie wishes everyone a Super Happy Deepavali🧨🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/2n3QL3NACV
— Sun Pictures (@sunpictures) October 30, 2024
மேலும் நடிகர் ரஜினி உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் படப்பிடிப்பில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கூலி படக்குழுவினர் தீபாவளி தினத்தை கொண்டாடும் விதமாக அனைவரும் கருப்பு நிற உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.