Homeசெய்திகள்சினிமாஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்த 'கூலி' படக்குழு!

ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்த ‘கூலி’ படக்குழு!

-

- Advertisement -

கூலி படக்குழு ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்த 'கூலி' படக்குழு!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படமானது ரஜினியின் 171 வது படமாகும். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இவருடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாகிர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

மேலும் பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஸ்பெஷல் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார் என கடந்த சில தினங்களுக்கு முன்னர் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இப்படம் தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என நம்பப்படுகிறது. எனவே ரசிகர்களும் இந்த படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு தகவல்களையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்திருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதே சமயம் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ