ரெட்ரோ பட ட்ரெய்லர் வெளியீட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யாவின் 44 வது படமாக உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. கங்குவா படம் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில், அடுத்தது ரெட்ரோ படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்பராஜூம், சூர்யாவும் இணைந்து இந்த படத்தை தயாரித்திருக்கின்றனர். கார்த்திக் சுப்பராஜ், தன்னுடைய ஸ்டைலில் லவ் ஸ்டோரியை இயக்கி இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
மேலும் இன்று (ஏப்ரல் 18) இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை, நேரு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 7 மணி அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்த படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.