spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாடேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது...... நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது…… நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் டேனியல் பாலாஜி. டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது...... நடிகர் கமல்ஹாசன் இரங்கல்!இவர் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் பைரவா, வடசென்னை போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 40க்கும் மேலான படங்களில் நடித்துள்ளார். நேற்று திடீரென டேனியல் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் டேனியல் பாலாஜியின் உயிரை காப்பாற்ற எவ்வளவு போராடியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. 48 வயதுடைய டேனியல் பாலாஜியின் மறைவு திரை பிரபலங்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டேனியல் பாலாஜியின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் டேனியல் பாலாஜியின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவினை வெளியிட்டுள்ளார். “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. இளம் வயது மரணங்களின் வேதனை மிகவும் பெரியது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கண்தானம் செய்ததனால் மறைந்த பின்னும் டேனியல் பாலாஜி வாழ்வார். ஒளியை கொடை அளித்து சென்றிருக்கும் பாலாஜிக்கு என்னுடைய அஞ்சலி” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ