Homeசெய்திகள்சினிமா'சிறுத்தை சிவா வெறித்தனமா பண்ணிட்டு இருக்காரு'..... 'கங்குவா' குறித்து தேவி ஸ்ரீ பிரசாத்!

‘சிறுத்தை சிவா வெறித்தனமா பண்ணிட்டு இருக்காரு’….. ‘கங்குவா’ குறித்து தேவி ஸ்ரீ பிரசாத்!

-

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், கங்குவா திரைப்படம் குறித்து சில அப்டேட்டுகளை கொடுத்துள்ளார்.

சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகிறது. மேலும் இப்படம் அடுத்த ஆண்டு தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.

அதைத்தொடர்ந்து பிரபலங்களும் படத்தின் எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகப்படுத்தும் வகையில் பல அப்டேட்டுகளை கொடுக்கின்றனர். அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “கங்குவார் படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன். சூர்யா சார் முதல் பாடலை கேட்டார். அந்தப் பாடல் நன்றாக இருந்ததால் அவர் மகிழ்ச்சியில் எனக்கு ஒரு பரிசளித்துள்ளார். சிறுத்தை சிவா ஒவ்வொன்றையும் வெறித்தனமாக செய்து வருகிறார். சூர்யா சாரை இந்த படம் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ