Homeசெய்திகள்சினிமா'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்.... காரணம் என்ன?

‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்…. காரணம் என்ன?

-

- Advertisement -
kadalkanni

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி படம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்.... காரணம் என்ன? இதில் அஜித்துடன் இணைந்து திரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு ஐதராபாத், ஸ்பெயின், பல்கேரியா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என ஆரம்பத்திலேயே படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படம் தள்ளிப் போகும் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தாலும் குட் பேட் அக்லி படம் பொங்கலுக்கு வருவது உறுதி என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 'குட் பேட் அக்லி' படத்தில் இருந்து நீக்கப்பட்ட தேவி ஸ்ரீ பிரசாத்.... காரணம் என்ன?அதாவது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு திருப்தி இல்லாததால் அவரை அந்த படத்தில் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ஜி.வி. பிரகாஷை இறக்கியுள்ளாராம் ஆதிக் ரவிச்சந்திரன். ஏற்கனவே மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தில் கூட தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இரைச்சலாக இருக்கிறது என பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில் தற்போது குட் பேட் அக்லி படத்திலிருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டிருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ