spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷ் - வெற்றிமாறன் சந்திப்பு.... அடுத்த ஆண்டு தொடங்கும் 'வடசென்னை 2'!

தனுஷ் – வெற்றிமாறன் சந்திப்பு…. அடுத்த ஆண்டு தொடங்கும் ‘வடசென்னை 2’!

-

- Advertisement -

வடசென்னை 2 திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கும் என தகவல் வெளியாகியிருக்கிறது.தனுஷ் - வெற்றிமாறன் சந்திப்பு.... அடுத்த ஆண்டு தொடங்கும் 'வடசென்னை 2'!

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வடசென்னை. அரசியல் கலந்த கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே அடுத்தபடியாக இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை 2 திரைப்படத்தை எப்போது இயக்குவார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வெற்றிமாறன், விரைவில் வடசென்னை 2 வரும் என அப்டேட் கொடுத்திருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் வடசென்னை 2 திரைப்படத்தில் தனுஷ் நடிக்கவில்லை எனவும் அதை வெற்றிமாறன் இயக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும் நடிகர் மணிகண்டன் தான் வடசென்னை 2 திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்றும் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் தான் இந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன.தனுஷ் - வெற்றிமாறன் சந்திப்பு.... அடுத்த ஆண்டு தொடங்கும் 'வடசென்னை 2'! ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவரும் சமீபத்தில் சந்தித்து பேசி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது வடசென்னை 2 திரைப்படம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும் இதனை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ