நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும், பாடகராவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். அதே சமயம் இவர் கடந்த 2017 ப. பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குனராகவும் உருவெடுத்து தற்போது தனது ஐம்பதாவது திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமாவில் அயராமல் உழைத்து வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக பிரகாஷ்ராஜ், நித்யா மேனன் கூட்டணியில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சமீப காலமாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தை உண்டர் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் கீழ் கஸ்தூரிராஜா, விஜயலட்சுமி கஸ்தூரிராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். காமெடி கலந்த காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வெளியாகி அதைத் தொடர்ந்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது இதன் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் முதல் பாடல் நடிகர் தனுஷின் குரலில் உருவாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Nilavukku ennadi en mel kobam …. First single in D voice …. Seekiram viduvoma …. #NEEK …
— G.V.Prakash Kumar (@gvprakash) August 1, 2024
மேலும் இந்த பாடல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இனிவரும் நாட்களில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.