நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறமைகளை தன் வசம் கொண்டிருப்பவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரையிலும் தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி கலக்கி வருகிறார். அந்த வகையில் பாலிவுட்டில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் இந்தியா முழுக்க பிரபலமடைந்தார். அதே சமயம் ஹாலிவுட்டிலும் களமிறங்கி ஒரு கை பார்த்தார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர், தி அவெஞ்சர்ஸ் கொஞ்சம் படங்களை இயக்கிய ருஷோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரேட் மேன் படத்தில் நடித்து எல்லை தாண்டி சாதனை செய்தார்.
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இந்த படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து மேலும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் சில படங்களை இயக்கியும் வருகிறார். இந்நிலையில் தனுஷ் குறித்த முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

அதாவது தனுஷ் மீண்டும் ஹாலிவுட் பக்கம் திரும்பி பார்க்க இருக்கிறாராம். தனுஷ் மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்க இருக்கிறாராம். இதனை கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.